Monday, 11 February 2013

புட்டுக்கு மண் சுமந்த பெருமான்


வைகையில் பெரும் வெள்ளம்  வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும் என்பதால் வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபப் பையன் வேடத்தில் வந்து வந்தியிடம் பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா என கேட்கிறார்.
அணை கட்ட யாருமில்லை







வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க அதையெல்லாம் இவரே சாப்பிட்டு விட்டு கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன் கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால் கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார்.முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான் துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப் போட அதுவரை அடைக்க முடியாத  வெள்ளத்துக்கு அணை  போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர்.

மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி  தடம் இருப்பது தெரிய வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு நிகழ்ந்த தலம் தான் இது.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் முக்கியமான புட்டுக்கு மண் சுமந்த படலம் இத்த தலத்தில் நிகழப்பெற்றதாக கூறப்படுகிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமாள் வீற்றிருக்கும் தலம்.கோவித்துக் கொண்டதால் கோவிச்ச சடையான் என்ற  பெயர் பெற்று பின்னர் அதுவே கோவிச்சடை என்றாகி பின்பு கோச்சடை என்ற பெயர் வந்தது. ரணதீர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.















 

No comments:

Post a Comment

What is your idea about this post? Pls leave a comment